கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருப்பதால் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் ரூ.1000 அபாரதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.