Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சி….. சரிபார்க்கும்போது சிக்கிய பெண்… போலீசார் விசாரணை..!!

மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண் போலி சான்றிதழை கொடுத்து பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த வருடம்  ஜூலை 1ஆம் தேதி பயிற்சிக்கு வந்துள்ளனர். இப்பயிற்சிக்கு வந்தவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதா என்று பார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பூர்பா பர்தமான்  மாவட்டத்தை சேர்ந்த கயுருனிஷா காதுன்(26) என்பவருடைய சான்றிதழ்களை உண்மைதன்மை அறிய அனுப்பியதில் அவருடைய சாதி சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து  கடந்த 15 ஆம் தேதி அன்று அவர் பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தக்கோலம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் கயுருனிஷா காதுன் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |