Categories
அரசியல் மாநில செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து வேலை…. உடனே பணிநீக்கம் செய்க…. சீமான் வலியுறுத்தல்….!!!!

போலி சான்றிதழ் மூலமாக தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து மோசடியில் ஈடுபட்ட வடமொழித்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.

சுமார் 200 வடமாநிலத்தவர்கள் அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ்களை தந்து பணியில் சேர்ந்துள்ளனர். யுபிஎஸ்சி கொடுத்த சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ் தந்ததை அரசு தேர்வுத் துறை உறுதி செய்தது. இதனால் தமிழகத்தில் மத்திய அரசு பணியிடங்களில் மோசடி செய்த 300 வடமாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களின் வேலைவாய்ப்பை போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்தவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று சீமான் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |