அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார்.
அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு மர்மமான முறையில் இறந்து விடவே, சிலகாலம் யார் கண்ணிலும் படாமல் வாழ்ந்து வந்திருந்த அன்னபூரணி, தற்போது ஆதி பராசக்தியின் மறு உருவமாக அழைக்கப்பட்டு சாமியாராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய கோரி செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக போலி சாமியார் அன்னபூரணியை செயல்பட்டு வருவதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.