Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போலி ஜிஎஸ்டி ரசீதுகள்…. 3,50,000 ரூபாய் மோசடி…. பெண் ஊழியர் கைது….!!

போலி ஜிஎஸ்டி கணக்கு மூலம் பணம் கையாடல் செய்த பெண் ஊழியரை  போலீசார் கைது செய்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சைனி இவாஞ்சலின். 24 வயதான இவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றார்.

இவர் அந்த நிறுவனத்தில் ஜிஎஸ்டி கணக்குகளை சரிபார்க்கும் போது ரூபாய் 31/2லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டு அலுவலகத்தில் பொய்யான ரசிதுகளை காண்பித்துள்ளார். இந்நிலையில் உயரதிகாரிகள் சைனி இவாஞ்சலின்  போலி ரசீதுகளை  வைத்து பணத்தை திருடியதை கண்டு பிடித்தனர்.

இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் செங்கல்பட்டிலுள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் சைனி இவாஞ்சலினை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |