Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“போலி நகைகளை வைத்து 74,000 மோசடி செய்த பெண்”…. மூன்று பேருக்கு போலீசார் வலைவீச்சு…!!!!

போலி நகைகளை வைத்து மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெயின்போ நகரைச் சேர்ந்த சசிகுமார் கோட்டகுப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகின்ற நிலையில் இவரின் கடைக்கு சென்ற 20 ஆம் தேதி பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கங்கா என்பவர் 10 கிராம் வளையலை அடகு வைத்து 30 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார். இந்த நகையை பரிசோதனை செய்ததில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது.

இது போலவே பிள்ளை சாவடியில் இருக்கும் அடகு கடையில் சென்ற 13ஆம் தேதி  கங்கா போலி நகைகளை அடகு வைத்து 12.000, ராஜேந்திரகுமாரின் அடகு கடையில் 32000 பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து புகார் செய்ததையடுத்து கோட்டக்குப்பம்
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கங்கா மோசடியில் ஈடுபடும் பொழுது தன்னுடன் இரண்டு ஆண்களை அழைத்துச் சென்றதும் தெரியவந்ததை அடுத்து போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Categories

Tech |