தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக பதிவாளரே போலி பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் பத்திரம் போலியானதாக இருந்தால் அதனை ரத்து செய்யவும் முடியும். இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
எனவே இந்த சட்டத்தின்படி முரணாக பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளது என்று பதிவாளர் கருதினால் அந்த பதிவை பதிவாளர் தானாக முன்வந்து ரத்து செய்து கொள்ளலாம். இதனிடையே போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். எனவே இனி தமிழகத்தில் எந்த ஒரு போலி பத்திரப்பதிவும் நடக்காது என்பது இந்த சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.