போலி பத்திரம் தயார் செய்து நிலம் மோசடி செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இதேபகுதியில் சுப்பிரமணியன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்துள்ள.து இதுகுறித்த வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சுப்பிரமணியன் பிரச்சனையில் இருக்கும் நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்துள்ளார்.
அந்த இடத்தை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து கேசவன் எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி சுப்பிரமணியன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.