Categories
அரசியல்

“போலி பாபா” சீக்கிரம் போயிருவாரு…. யோகியை மறைமுகமாக…. தாக்கிய அகிலேஷ் யாதவ்…!!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக போலி பாபா விரைவில் அகற்றப்படுவார் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகிலேஷ் யாதவ், பாஜக அரசுக்கு செய்த ஏமாற்று வேலையானது  மக்களுக்கு தெரிந்திருந்தால் உத்தரப் பிரதேச மக்கள் எங்களுடைய கட்சியை 400 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்வார்கள். பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்களுடைய கட்சியின் நோக்கமாக இருக்கிறது.

போலி பாபா (உபி முதல்வர்)விரைவில் அகற்றப்படுவார். பாஜக அரசு பொது மக்களை ஏமாற்றி வருகிறது. பாஜக தொண்டர்கள் தங்களுடைய வாகனங்களால் விவசாயிகளை ஏற்றி கொடூரமாக கொன்றனர். இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது. உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் விலை உயர்வுக்கு பின்னால் உள்ளது. இந்த அரசாங்கத்தின் கீழ் பணவீக்கம் மட்டுமல்ல குற்றமும் அதிகரித்துள்ளது என்று காட்டமாக பேசியுள்ளார்.

Categories

Tech |