இலங்கை நாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சாவின் மனைவியான சஷி வீரவன்சா, இரண்டு போலியான பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக குற்ற விசாரணை துறையினர் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த போது பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக போலியான பெயர்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என போலியான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது உறுதியானது . இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பிலும் விசாரணை செய்து முடிக்கப்பட்டன. இந்த பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்சாவின் மனைவி சஷி வீரவன்சாவுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.