போலியாக தயாரிக்கப்பட்ட மதுபானம் குடித்து 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், படாலா, தரன் போன்ற மாவட்டங்களில் போலி மதுபானம் குடித்த 21 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து ஜலந்தர் பிரிவு மண்டல ஆணையர் தலைமையில் விசாரிக்க முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலி மதுபானம் தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் போலி மதுபானம் பரவியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.