தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் போலி மது விற்பனையை கட்டுப்படுத்தவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்றும், டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்; கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.