Categories
தேசிய செய்திகள்

போலி முத்திரைத்தாள் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

கர்நாடகாவில் 19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போலி முத்திரைத்தாள்களை புழக்கத்தில் விட்ட புகார் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான போலி முத்திரைத் தாள்களை புழக்கத்தில் விட்ட சம்பவம் கடந்த 2001 ம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அப்துல் கரீம்டெல்கியை கைது செய்தனர். விசாரணையில் கர்நாடகா மட்டுமில்லாமல் ஆந்திரா மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் 30 ஆண்டுகாலம் சிறைத்தண்டனைப் பெற்ற டெல்கி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போலி முத்திரைத்தாள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. எஸ்.பி சாலை அமர் ரேடியோ கடை அருகில் மர்ம கும்பல் ஒன்று போலி முத்திரைத்தாள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அக்கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர் இதில் விவேக் நகரைச் சேர்ந்த அசைன் மோதி, பாசவேஷ்வர நகரைச் சேர்ந்த ஹரிஷ், சீமாபேகம், நஜ்மாபாகா, பாத்திமா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். 443 போலி முத்திரைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Categories

Tech |