சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி பள்ளி மாணவர்களிடம் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் தற்போது திண்டாடிக் கொண்டிருகின்றனர். தற்போதைய நாடுகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் சில தனியார் நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாக வேலைக்கு ஆட்கள் தேடி வருகிறார்கள். அவ்வாறு செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்பு செய்தி என்று வருகிறது. அதன் மூலமாக சிலர் வேலைவாய்ப்பைத் தேடி செல்கிறார்கள். ஆனால் அது உண்மையா இல்லையா என்பது பற்றி அவர்கள் அறிவதில்லை.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த பள்ளி மாணவர்களிடம் நூதன முறையில் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனியார் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மடிக்கணினிகளை கொடுத்து மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் செய்தித்தாள்களில் வரும் வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.