Categories
சினிமா தமிழ் சினிமா

“போலீசாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்”…. வெளியான ‘சைரன்’ படத்தின் அப்டேட்…!!!!!

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் உள்ளது.

எழுத்தாளர் ஆண்டனி பாக்கியராஜ் விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடத்தில் நடிக்க யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள்.

இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் படத்திற்கு “சைரன்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பேசிய பொழுது கூறியுள்ளதாவது, இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் ஜெயம் ரவிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறியுள்ளார்.

Categories

Tech |