பிரிட்டனில் பொதுமக்கள் ஒன்று திரண்டு காவல்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிட்டனின் முக்கிய பகுதியாக கருதப்படும் 31 இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி சாரா எவரார்ட் என்ற இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிவு செய்ததற்கு காவல்துறையினர் கொரோனா விதிகளை காரணம் காட்டி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் உட்பட பல்வேறு மக்கள் ஒன்றுகூடி சாரா எவரார்ட் கடைசியாக காணப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரிட்டன் அரசு புதிய மசோதா ஒன்றை அறிவித்துள்ளது. அந்த மசோதாவில் காவல்துறையினருக்கு அதிக அதிகாரம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிட்டனில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பாராளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது சாரா எவாரெர்ட் அஞ்சலி கூட்டத்தில் போலீசாரின் நடவடிக்கைக்கு பொறுப்பேற்று காவல்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.
இதனிடையே காவல் துறையின் தலைவர் இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேயர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வெளிப்பட கூறியுள்ளார் இதனைத்தொடர்ந்து தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்தில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.