தமிழக முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு தர்மபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் நேற்று போலீஸ் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பணியில் இருந்த போலீஸார் கூறியது, போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டு மற்றும் இடி.ஆர் குறைப்பு கைவிடப்படும் மிகவும் உதவியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
அதன் பிறகு காவல் நிலையத்தில் இருந்து கிளம்பும்போது காவலர் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் அவர்களிடம் பேசினார்கள். அப்போது குழந்தைகள் காவல் குடியிருப்பின் பின்புறத்தில் விளையாடுவதற்காக ஒரு பூங்கா வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனை உடனடியாக செய்து கொடுப்பதாக தெரிவித்தார் . அதன்பிறகு காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ,ஜி சுதாகர் ,சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர் உடன் இருந்தார்கள். முதல் அமைச்சரின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.