Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடலோர காவல் படையினரும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தாளமுத்து நகர் அருகே ஒரு நபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தாளமுத்துநகர் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனைத்து இரு சக்கர வாகனத்தையும் போலீசார் சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் தருவைகுளம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ரோடு சந்திப்பு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் விளாத்திகுளம் அருகே சிப்பிகுளம் சுவாமி நகரை சேர்ந்த அமலன் பச்சேக்(53) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் விசாரித்ததில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |