கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து துணை போலி சூப்பிரண்டு நமச்சிவாயம் மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ் சர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது. இதனை அவர்கள் ரோட்டில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சி செய்து தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 620 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதன்பின் சிறுவர்கள் இரண்டு பேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.