கேரளாவுக்கு டெம்போவில் 4 டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற நிலையில் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
நித்திரவிளை போலீஸ் நிலைய தனி பிரிவு ஏட்டு ஜோசப்புக்கு, விரிவினை கணபதியான்கடவு பாலம் வழியாக கேரளாவிற்கு டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீஸ்சார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக மீன்பாடி டெம்போ ஒன்று வந்தது. அதை நிறுத்த முயன்றபொழுது நிறுத்தாமல் செல்ல முயர்ச்சித்தார்கள்.
உடனே போலீசார் வாகனத்தை சுற்றி வளைத்தார்கள். இதனால் டெம்போ டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். பின் வாகனத்தை சோதனை செய்தபோது மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெம்போ மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். இதன்பின் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் டெம்போவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்தார்கள்.