தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பாலாஜி சரவணன் என்பவர் இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினருக்கு சட்டையில் அணிந்து கொள்ளும் நவீன கேமராவை வழங்கினார். இந்த கேமராவின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ஆகும். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார். அவர் கூறியதாவது, இந்த நவீன கேமராக்களை போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் சட்டைகளில் அணிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான வீடியோவை நவீன கேமரா பதிவு செய்யும். பதிவு செய்யாததை சேமித்து வைத்துக் கொள்ளும். இதை வாகன சோதனை, ரோந்து பணி செல்லுதல் மற்றும் போக்குவரத்தை சீர் செய்தல் போன்ற பல்வேறு விதமான பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், தவறான விதத்தில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உட்பட பல காவலர்கள் கலந்து கொண்டனர்.