போலீசாருக்கு டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிக்-டாக் என்ற செயலியில் வீடியோக்களை எடுத்து பதிவிடலாம்,பகிரலாம் என்பதுஅனைவருக்கும்தெரிந்த ஒன்றுதான். ஆனால்இந்தியாவில் இந்த செயலியை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்முறையாக டிக்-டாக்கில் பதிவுகளை வெளியிட பாகிஸ்தான் நாடு தடை விதித்துள்ளது. மேலும் ஆபாச பதிவுகளை வெளியிடும் அக்கவுண்ட் முடக்கப்படும் என அந்நிறுவனம் உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் நாடு இந்த தடையை விலகிவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போலீசாருக்கு டிக்-டாக் பதிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் உள்ளூர் ஊடக செய்தி மூலம் தகவல் வெளியானது.
மேலும் பணி நேரத்தில் டிக்-டாக் பதிவுகளை வெளியிட அனைத்து போலீஸாருக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் டிக்-டாக் செயலியில் பதிவேற்றி வைரல் ஆவது காவல்துறைக்கு எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தும் என கடிதம் வழியே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை மீறி சமூக ஊடங்களில் எந்த ஒரு அதிகாரியின் வீடியோ வைரல் ஆவது தெரிந்தால் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.