கோயம்பேடு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடந்த நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டை அடுத்து இருக்கும் சின்மயா நகரில் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் போலீசார் கோயம்பேட்டில் உள்ள அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கே இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்ததால் விடுதி மேலாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். அங்கே பெண்களுடன் உல்லாசமாக இருக்க வந்த ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.