காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், பாலம் சாலை பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வாகனங்களில் வருபவர்கள் முககவசம், தலைகவசம், உரிய ஆவணங்கள் வைத்துள்ளார்களா என சோதனை செய்துள்ளனர்.
அதன்படி தலைக்கவசம் அணியாமல் வந்த 15 பேர்களிடம் இருந்து தலா 100 ரூபாயும், முககவசம் அணியாமல் வந்த 10 பேரிடம் இருந்து தலா 200 ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளனர். மேலும் முககவசம் அணியாமல் வருபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளனர்.