Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. பெண் உள்பட 5 பேர் கைது….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் தலைமையில்  தனிப்படையினர் எர்ணாபுரம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நாமக்கலை நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது வாகனத்தில் 250 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், கந்தம்பாளையத்தை சேர்ந்த ராணி, விஜய் வீரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களது கூட்டாளிகளான ஈரோட்டை சேர்ந்த ஆனந்தி மற்றும் ராஜி என்ற 2 பெண்களையும் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்ட 340 கிலோ கஞ்சாவின் மதிப்பு 1 கோடி வரை இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களை பிடித்த நபர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரிகள் சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |