Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து… விசாரணையில் வெளிவந்த உண்மை… டிரைவர்களுக்கு வலைவீச்சு…!!

அனுமதியின்றி செம்மண்ணை அள்ளி சென்ற 2 டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பாலக்கோம்பை கென்னடிநகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த 2 டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்தது தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் பாலக்கோம்பை பகுதியை சேர்ந்த குருநாதன், வெங்கடேசன் என்பதும், அனுமதியின்றி செம்மண்ணை அள்ளி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |