சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையின் அப்பகுதியில் உள்ள 18-ஆம் கால்வாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருண்பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 56 மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் நடத்தி விசாரணையில் டாஸ்மார்க் கடையில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. மேலும் அருன்பாண்டியனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.