இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் முத்து கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கம்பத்திற்கு சென்ற முத்துகண்ணன் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்கண்ணன் உடனடியாக கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கம்பம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் 3 தினங்களுக்கு முன்பு திருடு போன முத்து கண்ணனின் இருசக்கர வாகனம் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் காவல்துறையினர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.