சட்ட விரோதமாக ஆட்டோவில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வண்ணாங்குண்டு பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது ஆட்டோவில் அனுமதியின்றி மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவரான பெரியபட்டினத்தை சேர்ந்த இர்பான்அலி(22) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 15 மணல் மூட்டைகளை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இர்பான்அலியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.