கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன் விநாயகர் சிலை வைக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வீட்டில் வைத்து வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது வெளியில் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து மக்கள் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. பல்வேறு இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.. சில இடங்களில் விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன..
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன் விநாயகர் சிலை வைக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கைதான இந்து முன்னணி அமைப்பினர் 10 பேரிடம் இருந்து 2 விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன..