Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனை…. சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது….!!

குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக காசி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி மற்றும் காவல்துறையினர் தொண்டி செய்யது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெள்ளை மணல் தெரு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி புக்கை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த ராஜா காவல்துறையினரை ஆபாசமாக பேசியும், அருகில் இருந்து இரும்பு கம்பியால் சப்-இன்ஸ்பெக்டர் காசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |