போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது விற்பனை செய்ய முயன்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள டி.வி.எஸ்.மேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வாலிபர் ஒருவர் மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து போலீசார் வாலிபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 48 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதுபாட்டில்களை வைத்திருந்த ஆவரங்காடு பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மொபட்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.