சாத்தான்குளம் தந்தை-மகன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதன்படி தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி டிஎஸ்பியி டம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டங்களை 5 ஆண்டுகள் தொடரவேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்கும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.போலீசார் உளவியல் ரீதியாக உடல் ரீதியாக உறுதியாக இருந்தால் தான் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் உயர் நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.