திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி தம்பி தோட்டம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டயம் படிப்பு படித்து முடித்துவிட்டு பிளம்பராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நர்மதா பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே பகுதியில் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகார இருவிட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தங்கத்துரையும் நர்மதாவும் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேறி கடந்த 13ஆம் தேதி காதல் ஜோடி ஒட்டச்சத்திரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். அப்போது தங்கதுரையும் நர்மதாவும் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்டம் போலீஸ் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.