வீட்டில் மதுபானம் பதுக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மடப்புரம் சிதம்பரம் கோவில்பத்து பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மதுபானம் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து 110 லிட்டர் மதுபானத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.