Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய நபர்கள்…!!

கஞ்சாவை வீட்டில் பதுக்கிய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலடி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தனிப்படை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேதம்பிள்ளைத் தெருவில் ஒரு வீட்டில் தனிப்படை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ரஞ்சித் என்பவர் அவரது பாட்டி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மகேஷ் என்ற நபரும் ரஞ்சித்துடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மகேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |