Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்….. பெற்றோர் செய்த காரியம்…. எரிந்த நிலையில் சிறுமி உடல் மீட்பு….!!

காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சஞ்சைராஜ் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தந்தை ஜெயக்கனி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சஞ்சைராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை மீட்டு கெங்குவார்பட்டி யில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்த சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து மனமுடைந்து காணப்பட்ட சிறுமி 2 தினங்களுக்கு முன் திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உறவினர்களை அழைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுமியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அதன் படி நேற்று முன்தினம் சிறுமியின் உடலை கொங்குவார்பட்டி மயானத்திற்கு கொண்டு சென்று எரித்துள்ளனர்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதி எரிந்த நிலையில் இருந்த சிறுமியின் உடலை மீட்டனர். இதன் பிறகு மருத்துவ குழுவினரை வரவழைத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். மேலும் சிறுமி தற்கொலை செய்ததை மறைத்து அவசர அவசரமாக உடலை எரிக்க முயன்ற சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |