Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… தண்டவாளத்தில் கிடந்த வாலிபர்… பொதுமக்கள் மறியலால் பரபரப்பு..!!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சரக்கு ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் வெட்டாறு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் நாகூர் அம்பேத்கார் நகர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரது மகன் கமல்ராஜ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அம்பேத்கர் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் கமல்ராஜ் சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தது அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து நாகூர் காவல்துறையினர் நாகை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாகூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |