Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… ரோந்து பணியில் சிக்கிய பெண்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பெண் ஒருவர் சந்தேகப்படும்படியாக பப்ளிக் ஆபீஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நாகை தர்மாகோவில் பகுதியில் வசித்து வரும் கலா என்பது தெரியவந்தது. மேலும் அவர் சட்டவிரோதமாக 300 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |