Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

நாகப்பட்டினம் வேலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் அருகே சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆனந்த குமார் ஆகியோர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் வெட்டாற்றிலிருந்து மணல் கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கோகூர் பகுதியில் வசித்து வரும் பிரபு, குமார், ஆசைதம்பி, ராஜமோகன், வீரசேகர், விக்னேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட் மாட்டு வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |