சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மறைத்துவைத்து மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு மறைவிடத்தில் வைத்து மது விற்பது தெரியவந்தது. மேலும் அங்கு விற்பனையில் ஈடுபட்ட தாயமங்கலத்தை சேர்ந்த அழகர்சாமி, போச்சட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் நவநீதகிருஷ்ணன், தாயமங்கலம் குமாரசாமி ஆகிய 3 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்களிடம் 144 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 144 மதுபாட்டில்களையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.