நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகை நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பப்ளிக் ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும் விதமாக ஒரு ஆணும், பெண்ணும் நின்று கொண்டிருந்தனர்.
இதனால் காவல் துறையினர் அவரகள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் 2 பேரின் மீதும் வழக்குப்பதிந்து பேரையும் பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.