Categories
மாநில செய்திகள்

போலீசுக்கே இந்த நிலைமையா?… அப்போ சாதாரண மக்கள் கதி என்ன?… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

திருச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி புதுக்கோட்டையில் முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பும்போது காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை உடனே விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் பெண் போலீஸ் அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லாத போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Categories

Tech |