காவல் நிலையத்தில் குட்கா மென்று எச்சில் துப்பிய போலீசாருக்கு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் கோக்புரா தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் 4 பேருக்கு குட்கா பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் தினமும் மென்று எச்சிலை காவல் நிலையத்திற்கு உள்ளேயே துப்பி வந்துள்ளனர். இதனால் அந்த காவல் நிலைய மிகவும் அசிங்கமாக காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட எஸ்பி கோக்புரா திடீரென்று காவல்நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்துள்ளார்.
அப்போது இந்த சம்பவம் தொடர்பாக அந்த 4 போலீசாரையும் எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் எச்சில் துப்பி காவல் நிலையத்தை அசிங்கப்படுத்திய அந்த நான்கு போலீசாரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றும்படி எஸ்பி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.