சென்னையை அடுத்த ராஜகோபால் கண்டிகை எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதரிடையே ஒரு கல்லூரியின் பின்புறம் காட்டு பகுதியில் ரவுடி பதிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் ரவுடியை பிடிக்க சென்றனர்.
அப்போது ரவுடி சச்சின் காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியை கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.அப்போது உடனடியாக ரவுடியை பிடிக்க காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் காலில் அடிபட்ட ரவுடியை மடக்கிப் பிடித்த போலீசார் காயமடைந்த ரவுடியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.