Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸாக சூரி… கைதியாக விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் வெற்றிமாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்றது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அதில்  ‘விடுதலை’ என்ற டைட்டிலுடன் சூரி மற்றும் விஜய்  சேதுபதி இருவருக்கும் தனித்தனியே போஸ்டர்கள் வெளியாகியுள்ளது . சூரி போலீஸாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் இருக்கும் இந்த போஸ்டர்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |