Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போலீஸிடமிருந்து தப்பி ஓடிய கைதி”….. கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

சிறை கைதி ஒருவர் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனங்காடு கோரிக்குளம் பகுதி யை சேர்ந்த கணேசன் என்பவர் மீது பல திருட்டு வழக்குகள் இருந்ததால் சென்ற சில நாட்களுக்கு முன்பாக போலீசார் அவரை கைது செய்தார்கள். முன்னதாக போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பித்து ஓடிய நிலையில் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் அவர் குணமடைந்ததைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்திருந்தார்கள்.

இதனால் போலீசார் நேற்று முன் தினம் மாலை மருத்துவமனையில் இருந்து கணேசனை அழைத்துக் கொண்டு தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார்கள். பின் ஒரு பேருந்தில் ஏறிய பொழுது கணேசனின் நண்பர் ஒருவர் அங்கு வந்துள்ளார். இதை பார்த்த கணேசன் பஸ்ஸிலிருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்து விட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் அவரை தேடி வந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலமாக இனாத்துக்கான்பட்டியில் உள்ள ஒரு முற்ப்புதரில் அவர் ஒளிந்து கொண்டிருந்ததை தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு போலீசார் கணேசனை கைது செய்தார்கள். பின் அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்று மத்திய சிறையில் அடைத்தார்கள்.

Categories

Tech |