Categories
உலக செய்திகள்

போலீஸை பார்த்ததும் தப்ப முயன்ற நபர்.. வாகனத்தினுள் காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது..?

சுவிற்சர்லாந்தில் காவல்துறையினரின் சோதனையில் வாகனத்தில் பெண்ணின் சடலத்தை கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சுவிற்சர்லாந்திற்கு, ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக ஒரு நபர் காரில் வர முயன்றுள்ளார். அங்கு காவல்துறையினரை கண்டவுடன் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்து வாகனத்தை பரிசோதித்துள்ளனர். வாகனத்தினுள் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில் ஒரு பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அந்த நபர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது அவரின் நாட்டிற்கு சென்ற சமயத்தில் உயிரிழந்த தன் மனைவியின் சடலத்தை சுவிற்சர்லாந்திற்கு  கொண்டு செல்வதற்காக வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது தான் காவல்துறையினரை கண்டவுடன் பயத்தில் திரும்பச் செல்ல முயற்சித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினரின் இந்த சம்பவத்தை சந்தேகமாக கருதவில்லை என்று கூறிவிட்டனர்.

Categories

Tech |