Categories
மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை…. பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் நடந்த கொடூரம்….!!

கலபுரகி பஸ் நிலையத்தில் போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலபுரகி மாவட்டம் வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் இவர் ஒரு போலீஸ்காரர் ஆவார். இவருடைய மகன் அபிஷேக் இவர் நேற்று காலை உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அபிஷேக்கை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் கலபுரகி பஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு அபிஷேக் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால் அபிஷேக்கை பின்தொடர்ந்து சுற்றிவளைத்த மர்மநபர்கள் கலபுரகி பஸ் நிலையத்தில் வைத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர் .இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அபிஷேக்கை கழுத்தை அறுத்து பயணிகளின் முன்னிலையில் துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர்.

இதனால் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்த தகவல் கலபுரகி காவல்நிலையத்திற்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முன்விரோதம் காரணமாக அபிஷேக் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? எனத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |