Categories
பல்சுவை

போலீஸ்காரருக்கு செய்த உதவி…. 1.5 கோடி ரூபாய் சம்பாதித்த பெண்…. எப்படி தெரியுமா…?

ஒரு காவல் ஆய்வாளருக்கு ஒரு பெண்மணி செய்த உதவியை பற்றி பார்க்கலாம். சிட்டேரா சிம்ஸ் சென்ற பெண்மணிக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணின் முதல் மகளை கடந்த 2012-ம் ஆண்டு சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதனால் சிட்டேரா சிம்ஸ் தன்னுடைய 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் திடீரென சிட்டேரா சிம்ஸ் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து அவரை வேலையிலிருந்து தூக்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் சிட்டேரா சிம்ஸ் தன்னுடைய மகளுடன் ஒரு பல்பொருள் அங்காடி கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருடைய மகள் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதில் 100 டாலர் பணம் கிடைத்துள்ளது. அப்போது ஒரு காவல் ஆய்வாளரை சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இதை கேள்வி பட்ட சிட்டோரா‌ சிம்ஸ் தனக்கு லாட்டரி சீட்டுகள் மூலமாக கிடைத்த 100 டாலர் பணத்தை காவல் ஆய்வாளரின் மருத்துவ செலவிற்காக கொடுத்துவிட்டார்.இதைத் தெரிந்து கொண்ட காவல்துறையினர் அந்த பெண்ணின் தகவல்களை சேகரித்து சிட்டோரா சிம்ஸ் வீட்டிற்கு சென்று 100 டாலர் பணத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த பணத்தை வாங்க மறுத்த பெண்  அதை காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்கு கொடுத்துவிடுங்கள். அவர்களுக்குத்தான் இந்த பணம் தற்போது தேவை என கூறிவிட்டார். அதாவது தன்னுடைய முதல் மகள் கொலை செய்யப்பட்ட போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அந்த காவல் ஆய்வாளர் தான் சிட்டோரா சிம்ஸ்க்கு பல உதவிகள் செய்துள்ளார். இதன் காரணமாகத்தான் காவல் ஆய்வாளருக்கு அவர் உதவி செய்துள்ளார்.

மேலும் இதனால் காவல் துறையினர் இணையதளத்தில் சிட்டோரா சிம்ஸ் மகளின் கல்விச் செலவுக்கான பணத்தை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு 2 லட்சம் டாலர்ஸ் கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 1.5 கோடி ரூபாயாகும். இதனையடுத்து காவல்துறை ஆய்வாளரும் மருத்துவமனையில் இருந்து பூரணமாக குணமடைந்தார்.

Categories

Tech |